

துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தான சஞ்சாரத்தால் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்துவிடுவீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாகக் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.
பெண்களுக்கு, திடீர்ச் செலவு உண்டாகலாம். கலைத் துறையினருக்கு, காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் கிரக சூழ்நிலை உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. எல்லாவற்றிலும் இருந்து வந்த மனக் கவலை நீங்கும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.
கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்துகொள்வது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு, அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, தெய்வபக்தி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைக் கவனமாகப் படித்துக் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 4, 9.
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் இருக்கும் கிரக சேர்க்கையால் சுணக்க நிலை மாறும். வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமுகமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு, காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும்.
தொழிலில் புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். பெண்களுக்கு, தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். கலைத் துறையினருக்கு, நன்மை பயக்கும் வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் மேல் போட்டி மற்றும் பொறாமை கொண்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். மாணவர்களுக்கு, கல்வி விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை.
எண்கள்: 1, 3, 5.
பரிகாரம்: சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் பாக்கியாதிபதி புதன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களுக்குச் சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுரியத்தால் வேலைகளை திறமையாகச் செய்து முடித்துப் பாராட்டுப் பெறுவீர்கள்.
பதவி உயர்வு கிடைக்கலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு, பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியைப் பற்றி பதற்றம் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: தினமும் முருகனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்க, பிரச்சினைகள் குறையும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைச் சூரியன், செவ்வாய் பார்ப்பதால் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். பணவரத்து இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் உற்சாகமாகக் காணப்படுவார்கள். பெண்களுக்கு, மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத் துறையினருக்கு, காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்துக்குத் தேவையான பணம் வந்து குவியும். மாணவர்களுக்கு, மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, வெள்ளை.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைக் குரு செவ்வாய் பார்ப்பதால் தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பெண்களுக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துகளைப் பரிமாறும் முன் பொறுமையும் நிதானமும் அவசியம். அரசியல்வாதிகள் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள்
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும்.