

துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன், சனி சாரம் பெற்று சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். சுக வாழ்க்கை உண்டாகும். திருமண முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வந்துசேரும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். உங்களது அத்தனை முயற்சிகளுக்கும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும்.
பெண்களுக்கு, இழுபறியாக இருந்த பிரச்சினைகள் சாதகமான முடிவு பெறும். கலைத் துறையினருக்கு, உற்சாகம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, சுதந்திரமான எண்ணம் ஏற்படும். மாணவர்கள், ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக்கொள்வீர்கள். புத்தகங்களைக் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: சனிக்கிழமையன்று சனிபகவான், விநாயகரை வழிபட எல்லாக் காரியங்களும் நன்றாக நடக்கும். கஷ்டங்கள் தீரும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியுடன் சஞ்சரிக்கிறார். பணவரவு கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வாக்குவாதங்கள் ஏற்படும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியங்களைச் செய்துமுடிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும்.
நண்பர்கள், உறவினர்களிடம் கவுரவம் கூடும். பெண்களுக்கு, எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கலைத் துறையினருக்கு, பிறருக்கு உதவும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, புகழ், கௌரவம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடையக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 4, 9
பரிகாரம்: வியாழக்கிழமையன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் அஷ்டமஸ்தானத்தில் கிரகங்களின் கூட்டணியால் சில சிரமங்கள் ஏற்பட்டாலும் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக முடியும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் கவனமாகப் பழக வேண்டும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் ஏற்படலாம்.
பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு, எதிலும் மெத்தனப் போக்கு காணப்படும். கலைத் துறையினருக்கு, பயணங்களும் அலைச்சலும் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறத் தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
எண்கள்: 1, 3, 5
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரவு கூடும். கடன் பிரச்சினை தீரும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைப் பார்க்கும் கிரகங்களால் பணவரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனக்குழப்பங்கள் ஏற்பட்டு மீள்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். திறமையான செயல்களால் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தலைதூக்கும். எனவே, சாதுரியமாகப் பேசிச் சமாளிக்க வேண்டும்.
பொதுக் காரியங்களில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். பெண்களுக்கு, எந்த விவகாரத்தையும் எதிர்கொள்ளும் மனவலிமை உண்டாகும். கலைத் துறையினருக்கு, பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவதற்காகத் திட்டமிட்டுப் பாடங்களைப் படிக்க வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: வடபழனி முருகனை வணங்கி வரத் தொல்லைகள் நீங்கும். நன்மை உண்டாகும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைப் பார்க்கும் செவ்வாய், குரு பார்வையால் பணம் வரும். எதிர்த்துச் செயல்பட்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். நீண்டநாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றிகளைப் பெறுவீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் திடீர்க் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் உண்டாகலாம்; கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு, புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: நீலம், பச்சை, வெள்ளை
எண்கள்: 6, 9
பரிகாரம்: பவுர்ணமி பூஜை செய்து மகாலட்சுமியை வணங்கக் கடன் பிரச்சினைகள் தீரும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் தனாதிபதி லாபஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரவு இருக்கும். திறமையான செயல்களால் புகழும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில், எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். வெளித் தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு, மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கலைத் துறையினருக்கு, உடைமைகளில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, புதிய பதவிகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: சுந்தரகாண்டம் படித்துப் பெருமாளை வணங்க சகல நன்மைகளும் உண்டாகும்.