Published : 01 Aug 2019 11:48 AM
Last Updated : 01 Aug 2019 11:48 AM

வார ராசி பலன்கள் - ஆகஸ்ட் 01 முதல் 07 வரை ( மேஷம் முதல் கன்னி வரை)  

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில், நிலுவைப் பணம் வந்து சேரும். குடும்பத்தினரின் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம்.

கணவன் மனைவிக்குள் திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்குப் பாடுபடுவீர்கள். கலைத் துறையினருக்கு, மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அரசியல் வாதிகளுக்கு, கோபத்தைந் தவிர்க்க வேண்டும். மாணவர்கள், நிதானத்துடன் செயல்பட வேண்டும். பாடங்களைக் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் 
திசைகள்: கிழக்கு, வடக்கு 
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் 
எண்கள்: 1, 3, 9 
பரிகாரம்: அங்காளம்மனைத் தீபம் ஏற்றி வணங்க கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன், குருவின் சஞ்சாரம் அனுகூலத்தைக் கொடுத்தாலும் அஷ்டமத்துச் சனி என்பதால் கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். தொழில், வியாபாரத்தில் சுணக்கம் காணப்படும். பணிச்சுமை காரணமாகத் திடீர்க் கோபம் உண்டாகலாம். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் அக்கறை தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பேச வேண்டும்.

விபரீத ஆசைகள் ஏற்படலாம். பெண்களுக்கு, மற்றவர்களின் செயல்களால் திடீர்க் கோபம் உண்டாகலாம். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் வீண் செலவைக் குறைப்பது நல்லது. மாணவர்களுக்குள் போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர்களிடம் அக்கறை காட்டுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி 
திசைகள்: மேற்கு, வடமேற்கு 
நிறங்கள்: வெள்ளை 
எண்கள்: 2, 6 
பரிகாரம்: நவக்கிரகத்தில் சூரியனைத் தீபம் ஏற்றி வழிபடக்  கடன் குறையும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் தனவாக்கு, குடும்பஸ்தானத்துக்கு மாறுகிறார். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவுகள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரவு திருப்தி தரும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அமைதியாக அணுகுவது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு, எண்ணப்படி காரியங்களைச் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். கலைத் துறையினருக்கு, செலவுகளைக் குறைத்துச் சிக்கனத்தைக் கையாளுதல் வேண்டும். அரசியல்வாதிகளின்  கவுரவம் உயரும். மாணவர்களுக்கு, கல்வியில் காணப்பட்ட மெத்தனப் போக்கு நீங்கி, சுறுசுறுப்பாகப் பாடங்களைப் படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுங்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் 
திசைகள்: வடக்கு, தென்மேற்கு 
நிறங்கள்: வெள்ளை, பச்சை 
எண்கள்: 2, 5 
பரிகாரம்: புதன்கிழமையன்று நவகிரகத்தில் புதனைத் தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தைத் தரும். சிக்கலான பிரச்சினைகளையும் எளிதாகத் தீர்ப்பீர்கள்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் காரிய தாமதங்கள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபார விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். நிலம், வீடு தொடர்பில் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோபலம் கூடும். பெண்களுக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் தீரும். கலைத் துறையினருக்கு, எதிர்ப்புகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு, பணவரவு கூடும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன் 
திசைகள்: மேற்கு, வடமேற்கு 
நிறங்கள்: வெள்ளை, நீலம் 
எண்கள்: 2, 6 
பரிகாரம்: கன்னிப் பெண்கள் ஒன்பது பேருக்குத் தாம்பூலம், பூ, மஞ்சள் கொடுத்து முடிந்த வகையில் உதவினால் எல்லாப் பிரச்சினைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் அனைத்து வகையிலும் நன்மை அளிக்கும் வகையில் சஞ்சரிக்கிறார். அரசாங்க வகையில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர் பிரச்சினைகளில் வாதாடி வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர்ப் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு, பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதற்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்துக்கு  உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் 
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு 
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு 
எண்கள்: 1, 3, 9 
பரிகாரம்: செவ்வாய்க்கிழமையன்று மாரியம்மனைத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் லாபஸ்தானத்துக்கு மாறுகிறார். எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கூடுதலான நேரம் பணியாற்ற வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளால் படபடப்பு ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு, மற்றவர்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். கலைத் துறையினருக்கு, செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, வீண் அலைச்சல் உண்டாகும். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாகப் படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறையும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி 
திசைகள்: தெற்கு, தென்மேற்கு 
நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம் 
எண்கள்: 5, 6 
பரிகாரம்: குருவுக்கு வியாழக்கிழமையன்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x