Published : 25 Jul 2019 12:36 PM
Last Updated : 25 Jul 2019 12:36 PM

வார ராசி பலன்கள் - ஜூலை 25 முதல் 31 வரை ( மேஷம் முதல் கன்னி வரை)  

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ராசிநாதன் செவ்வாயின் பாதசார சஞ்சாரத்தால் சாதகமான பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வழக்குகளில் சாதகம் உண்டாகும். உடல்சோர்வு உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் புத்திசாதுரியத்தால் மேலதிகாரிகள் சொன்ன வேலையைச் சிறப்பாகச் செய்வார்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, முக்கிய முடிவுகளைக் கொஞ்ச நாட்களுக்கு ஒத்திப்போடுவது நல்லது. பெண்களுக்கு, மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, பாடங்களைக் கவனமாகப் படித்துக் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி 
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு 
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் எண்கள்: 3, 9 
பரிகாரம்: சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க, திருமணத் தடை நீங்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் தைரிய ஸ்தானத்தில் இருப்பதாலும் தனவாக்குக்கான குடும்பாதிபதி புதன் ஆட்சியாக இருப்பதாலும் யோக பலன்களைப் பெறப் போகிறீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிபெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் உறவு பலப்படும். குழந்தைகளை மகிழ்ச்சிக்குள்ளாக்குவீர்கள். பிரிந்த உறவினர்கள் வீடுதேடி வருவார்கள். அரசியல்வாதிகளுக்கு, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகளை ஒப்புக்கொள்வதற்கு முன்னால் ஆலோசித்துச் செய்ய வேண்டும். பெண்களுக்கு, காரிய அனுகூலம் உண்டாகும். கவலைகள் மனத்தை அரிக்கும். மாணவர்களுக்கு, வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக்கூடும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி 
திசைகள்: வடக்கு, வடமேற்கு 
நிறங்கள்: பச்சை, கருநீலம் 
எண்கள்: 3, 7 
பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிரனுக்குத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலேயே ராசிநாதன் புதன் ஆட்சியிலிருப்பதால் நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகத்தைக் காணலாம். உத்தியோகத்தில் புத்திசாலித்தனத்தால் வேலைகளைத் திறமையாகச் செய்து முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் வெளிநபர்களால் குழப்பம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காகச் செலவுகளைச் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, முக்கியமான வாய்ப்புகள் வரும். கலைத் துறையினருக்கு, விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேரலாம். எந்த வாய்ப்பையும் தவறவிட வேண்டாம். பெண்களுக்கு, எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மாணவர்களுக்கு, கல்வியில் மேன்மை அடைவதற்குக் கவனத்துடன் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், சனி 
திசைகள்: வடமேற்கு, வடக்கு 
நிறங்கள்: சிவப்பு, பச்சை 
எண்கள்: 3, 5 
பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேதனைகள் மாறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் எளிதாகப் பணிகளைச் செய்து முடிப்பார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துத் தேவையான பணிகளைக் கவனிப்பீர்கள். விருந்தினர் வருகை மகிழ்ச்சி தரும். சூரியனின் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். கலைத் துறையினருக்கு, சிறிய முயற்சிகள்கூட நிறைந்த பலனைத் தரும். பெண்களுக்கு, புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களைப் பத்திரமாக வைத்திருப்பது நல்லது. மாணவர்களுக்கு, கல்வியில் தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் 
திசைகள்: வடக்கு, வடகிழக்கு 
நிறங்கள்: வெள்ளை, பிரவுன் 
எண்கள்: 2, 3 
பரிகாரம்: சனிக்கிழமையன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வணங்கி வர துன்பமும் தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் கிரகக் கூட்டணியால் ஆதாயம் கிடைக்கும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நேரம் தவறி உணவு உண்ண நேரலாம். பணி நிமித்தமாக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகழ்ச்சியடைவீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வீடு, மனை, வாகன யோகம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு, யாரிடமும் ரகசியங்களைக் கூற வேண்டாம். கலைத் துறையினருக்கு, சில புதிய அறிமுகங்களைப் பெறுவதனால் வெற்றிகளைப் பெற முடியும். பெண்களுக்கு, பேச்சுத் திறமையால் காரியங்கள் சாதகமாகும். மாணவர்களுக்கு, மனதை ஒருமுகப்படுத்திப் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன் 
திசைகள்: கிழக்கு, மேற்கு 
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் 
எண்கள்: 1, 3 
பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதனின் பாதசார சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. ஆபரணங்கள் சேரும் காலகட்டம் இது. அரசியல்வாதிகளுக்கு, புதிய முயற்சிகள் தங்குதடையின்றி நடைபெறும் காலகட்டம் இது. தந்தையின் பதவிக்காகக் காத்திருப்போருக்கு நல்ல நேரம். கலைத் துறையினருக்கு, உதவிகள் தேடி வரும். பெண்களுக்கு, நீண்ட நாட்களாகச் செய்ய நினைத்த ஒரு காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன் 
திசைகள்: தெற்கு, தென் மேற்கு 
நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம் 
எண்கள்: 5, 7 
பரிகாரம்: நந்தீஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வணங்கக் கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x