

துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் தைரிய ஸ்தானத்திலிருக்கும் சுகாதிபதியால் எதிர்ப்புகள் விலகும். தொழில் துறையினர் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். எதிர்பார்க்கும் வர்த்தக ஆர்டர்கள் தங்குதடையின்றி வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு, எதிர்பார்த்த பதவி உயர்வு வந்தே தீரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள்.
கணவன் மனைவிக்குள் கோபமான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். உடனிருப்பவர்களே இடையூறாக இருப்பார்கள். எச்சரிக்கையுடன் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். பெண்களுக்கு, பணத்தேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலைத் தரும். மாணவர்களுக்கு, கல்விக்காகச் செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில் திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தென் மேற்கு, வடக்கு
நிறங்கள்: வெளிர் நீலம், ஆரஞ்சு
எண்கள்: 4, 5, 7 பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வணங்கிவர எல்லாக் காரியங்களும் நன்மையாக நடக்கும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் பாக்கியாதிபதி சஞ்சாரத்தால் தாயாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் தடைகளை உடைப்பதற்குச் சற்றுக் கடினமாக உழைக்க வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு, நிம்மதியில்லாமல் அவதிப்படுவீர்கள்.
உங்கள் ஆதங்கத்தை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது. கலைத் துறையினருக்கு, சீரான பாதையில் பயணிப்பீர்கள். உடனிருப்பவர்கள் வேலைகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெண்களுக்கு, கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு, மேற்கல்வி பயில விரும்புபவர்கள் சிறு தடங்கல்களைச் சந்திக்க நேரலாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: தென்மேற்கு, வடக்கு
நிறங்கள்: சிவப்பு, பச்சை
எண்கள்: 5, 9 பரிகாரம்: தினமும் தாமரை மலர் கொண்டு மகாலட்சுமியை வணங்குங்கள்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் குரு விரய ஸ்தானத்திலிருப்பதால் எதிலும் நிதானமாகச் செயல்படுதல் வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் சாமர்த்தியமான பேச்சால் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.
ரகசியங்களைப் பகிர வேண்டாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, கவலைகளைக் களைந்து வேலைகளைக் கவனிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டுத் தகவல்கள் மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு, சிக்கலான பிரச்சினைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் உதவி உண்டு. மாணவர்களுக்கு, கல்வியில் சக நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு
நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு,
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைப் பார்க்கும் கிரகங்களின் கூட்டணியால் மனக்கவலை குறையும். உத்தியோகத்தில் அவசரப்படாமல் நிதானமாகப் பணிகளைக் கவனிக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் மறைமுக மனவருத்தங்கள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது.
கலைத் துறையினருக்கு, மேல் நாடுகளுக்குப் படப்பிடிப்புகளுக்குச் சென்று வரும்போது கவனமாக இருக்க வேண்டும். தீவிரமான முயற்சியினால் வெற்றிகள் கிடைக்கும். பெண்களுக்கு, காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்கள் நேரலாம். மாணவர்களுக்கு, பாடங்களை ஒருமுறைக்குப் பலமுறை மனத்தில் வாங்கிப் படிப்பது வெற்றிக்கு உதவும். அலைச்சல், காரியத் தடை, மனக்குழப்பம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: சனி, ஞாயிறு
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: நீலம், கருஞ்சிவப்பு
எண்கள்: 4, 7
பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள மணிமங்கலம் ராஜகோபால பெருமாளைத் தரிசித்துவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சஞ்சாரத்தால் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டாம். தொழில், வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டாலும் பணவரவு தடைப்படாது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் மனவருத்தங்கள் நீங்கும்.
பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். சுகமான சூழ்நிலை நிலவும். எதிர்ப்புகள் மறையும். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வரும். வெளியூர்ப் பயணங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட தூரத் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். மாணவர்களுக்கு, பாடங்கள் எளிதாகப் புரியும். படிப்புக்கேற்ற வெற்றி கிடைக்கும். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருத்தல் வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி, சனி
திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு
நிறங்கள்: கரும் பச்சை, கரு நீலம்
எண்கள்: 6, 8, 9
பரிகாரம்: அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்றுவர மன அமைதி கிடைக்கும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய், சூரியனால் வீண் கவலை ஏற்படலாம். புதிய வேலைக்கு முயல்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவிக்குள் கோபம் தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான கவலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தில் இருந்து திடீர் அழைப்புகள் வரலாம்.
கலைத் துறையினருக்கு, விசேஷ நன்மைகள் நடக்கும். வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரலாம். பெண்களுக்கு, எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை யோசித்து, அந்தக் காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். மாணவர்களுக்கு, கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டத்தால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களைக் கவனத்துடன் பாதுகாத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசத்தைத் தினமும் படித்து வரக் குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.