Published : 18 Jul 2019 12:41 PM
Last Updated : 18 Jul 2019 12:41 PM

வார ராசி பலன்கள் ஜூலை 18 முதல் 24 வரை ( மேஷம் முதல் கன்னி வரை)  

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியனுடன் இணைந்து இருப்பதால் பயண வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத் துணையால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மனவருத்தம் ஏற்படும் சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் தாமதம் ஏற்படலாம்.

அரசியல்வாதிகளுக்கு, தீவிர முனைப்போடு செயல்பட்டுக் காரியத்தைச் சாதிப்பீர்கள். சிலரின் தொந்தரவுகளை நீங்கள் சகிக்க வேண்டி வரலாம். கலைத் துறையினருக்கு, வெற்றிகள் தொடரும். பெண்களுக்கு, எந்த வாக்குறுதியையும் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் குறைப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைவதற்குக் கவனத்துடன் படிப்பது நல்லது. நிதானம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன் 
திசைகள்: மேற்கு, தெற்கு 
நிறங்கள்: மஞ்சள், சிவப்பு 
எண்கள்: 1, 3, 9 
பரிகாரம்: முருகப் பெருமானைக் கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கிவர வளங்களும் உண்டாகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் சுகாதிபதி செவ்வாயுடன் இணைந்து இருப்பதால் காரியத் தடை ஏற்படலாம். கவனமாகச் செயல்பட வேண்டும். மனக்குழப்பம் நீங்கித் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் கோபத்தைக் குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதனால் முன்னேற்றம் காண முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

பிள்ளைகளுக்காகப் பாடுபடுவீர்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும்போது நிதானம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கும். கலைத் துறையினருக்கு, பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். நிதானம் தேவை. மாணவர்களுக்கு, திட்டமிட்டுப் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி 
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு 
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை 
எண்கள்: 2, 5, 6 
பரிகாரம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லி வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி, சுக்ரனுடன் இணைந்து இருப்பதால் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும்; உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கிடைக்கும். நிதானமாகப் பேசுவது நல்லது. கணவன் மனைவிக்குள் சகஜநிலை நீடிக்கும்.

பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். அரசியல்வாதிகள் தீவிரமாகச் செயல்பட்டு மதிப்புப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, தேவையான உதவிகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெண்களுக்கு, வீண் கவலை உண்டாகும். செலவு கூடும். மாணவர்களுக்கு, உயர்கல்வி தொடர்பான கவலை நீங்கும். ஆனால், கல்வியில் வெற்றிபெறக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், சனி 
திசைகள்: வடக்கு, கிழக்கு 
நிறங்கள்: பச்சை, வெள்ளை 
எண்கள்: 2, 4 பரிகாரம்: ஸ்ரீநிவாசப் பெருமாளைச் சேவித்து வர மனக் குழப்பம் நீங்கும். 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் குடும்பாதிபதி சஞ்சாரத்தால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். குடும்பத்தில் மனவருத்தங்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஊடல் நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும்.

அரசியல்வாதிகளுக்கு, பிறர் மீது சங்கடங்கள் ஏற்படலாம். திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். கலைத் துறையினருக்கு, அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்குரிய பலன்களைப் பெறுவீர்கள். சிறிய கலைஞர்களும் வெற்றியை ருசிப்பார்கள். பெண்களுக்கு, அக்கம்பக்கத்தவருடன் மன வருத்தம் நீங்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வத்துடன் பாடங்களைப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் 
திசைகள்: தெற்கு, கிழக்கு 
நிறங்கள்: வெண்மை, நீலம் 
எண்கள்: 3, 5 
பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்பப் பிரச்சினை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி விரயஸ்தானத்தில் இருப்பதால் திடீர்ப் பதற்றம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் கூடுதல் சிரத்தையுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் உண்டாகும். கணவன் மனைவிக்குள் சுமுகமான உறவு இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு, பிறர் விவகாரங்களில் தலையிடாமல் அமைதியாக இருக்க வேண்டும். எதிர்ப்புகளை அனுபவிக்க வேண்டி வரலாம். கலைத் துறையினருக்கு, பக்குவமாக நடந்து கொண்டு அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெண்களுக்கு, மறைமுகமாகக் குறை கூறியவர்கள் தங்களது தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு, கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள் 
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு 
நிறங்கள்: சிவப்பு, பிரவுன் 
எண்கள்: 1, 7 
பரிகாரம்: மகாலட்சுமியை பூஜிக்க பணப் பிரச்சினை நீங்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதியின் தொழில் ஸ்தான சஞ்சாரம் நடப்பதால் உங்களது செயல்திறனுக்குப் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர்த் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலப் பாதிப்பு உண்டாகலாம். தொழில், வியாபாரம் தொடர்பான குழப்பங்கள் நீங்கும். வேலை இடத்தில் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம்.

எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப்பிடிக்க வேண்டும். மனத்தில் துணிச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, கூட்டு முயற்சிகள் பலன்தரும். கலைத் துறையினருக்கு, வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள். பெண்களுக்கு, வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு முயற்சியுடன் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் 
திசைகள்: வடமேற்கு, கிழக்கு  
நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு 
எண்கள்: 1, 5 
பரிகாரம்: உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாளை வழிபட, குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். 
 


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x