

காஞ்சிபுரம் மாவட்டம் திருவேளுக்கை அழகிய சிங்கர் பெருமாள் கோயில், திருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 46-வது திவ்ய தேசம் ஆகும். நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அதிசய அமைப்பாகும். ஒரு சமயம் பிரம்மதேவர் யாகம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அரக்கர்கள் அவரது யாகத்துக்கு இடையூறு விளைவித்தனர். இது குறித்து பிரம்மதேவர், திருமாலிடம் முறையிட்டு, யாகத்தை சிறப்பாக நடத்த, தயை புரியுமாறு வேண்டினார். திருமாலும் பிரம்மதேவரின் யாகத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பாதுகாப்பதாக உறுதி அளித்தார்.