

பெரும் வெள்ளத்தின் நடுவில் உயிர் வாழும் நம்பிக்கையின் கதை. இது இன்றைக்கும் பேரிடர் காலத்தில் நாம் செய்யும் முன்னேற்பாடுகள் போலவே இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. என்ன, முன்னேற்பாடுகள் கடவுளுக்கும், நோவா என்கிற மாமனிதருக்கும் இடையே நடக்கிறது. விவிலியத்தின் மனித குல வரலாற்றில், நோவா என்றொரு நேர்மையான மனிதர் இருந்தார்.
அவர் கடவுளோடு நடந்தார். அவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். நோவாவின் காலத்தில், மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும், அவர்களின் சிந்தனைகள் தீமையையே உருவாக்குவதையும் கண்ட கடவுள் மனம் வருந்தி, “நான் படைத்த மனிதர் தொடங்கி கால்நடைகள், வானத்துப் பறவைகள் ஈறாக அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்" என்றார்.