

‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன் மயிலாடுதுறையிலிருந்து வடக்கே 20 கிமீ தொலைவிலும், சிதம்பரத்துக்கு தெற்கே 19 கிமீ தொலைவிலும் உள்ள சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் கோயில், வழக்குகளில் வெற்றி அருளும் தலமாகப் போற்றப்
படுகிறது.
தல வரலாறு: ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து, ‘ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை தோணி யாக்கி, உமா மகேஸ்வரராக வரும்போது, ஊழிக்காலத்திலும் அழியாத சீர்காழி தலத்தை பார்த்தார். இதுவே எல்லாவற்றுக்கும் மூல ஷேத்ரம் என்று தோணியுடன் இத்தலத்தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள்.