

துயரங்களுக்கான தீர்வு இராமகதையில் கிடைக்கும் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். தமிழ்நாடு, கர்நாடகா என்று மாநிலங்கள் தாண்டி, இந்திய நாட்டைத் தாண்டி, பல நாடுகளிலும் இராமாயணத்தின் புகழ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 1863-ம் ஆண்டு, வாழ்த்தப்பட்டதாகவும் வளமானதாகவும் என் நினைவில் தங்கும்.
இந்தியாவின் புனிதக் கவிதையான தெய்விக இராமாயணத்தை முதன் முதலில் நான் படித்த ஆண்டு. காலத்தால் படிந்துவிட்ட கசடுகளை நீக்கி, நம்மைத் தூய்மையாக்குகிற காவியப் பெருக்கு இது. யாருடைய உள்ளங்கள் உலர்ந்து போயிருக்கின்றனவோ, அவர்கள் தங்களை இராமாயணத்தில் அமிழ்த்திக் கொள்ளட்டும். எதையோ தொலைத்துவிட்டு அழுது கொண்டிருப்பவர்கள், இதமான மென்மையையும் இயற்கையின் தோழமையையும் இராமாயணத்தில் பெறட்டும்.