

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் வீரட்டேசுவரர் கோயில். அட்ட வீரட்டத் தலங்களில் 6-வது தலம். 48,000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர். வாராகி பூஜித்த தலம்.
தலவரலாறு: தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கர்மங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆண வம் கொண்டனர்.