

சரண் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மற்றும் புதியதாக இசை, நாட்டியம் போன்ற கலைகளைக் கற்பது, வேதத்தைக் கற்பது போன்றவற்றைச் செய்வது வழக்கம். இதைத்தான் வித்யாரம்பம் (கற்பது) என்று சொல்வதுண்டு. அன்று கல்விக் கடவுளான சரஸ்வதிதேவியை (சாரதாம்பாள்) வழிபட்டு மேற்படி செயல்களை தொடங்குவர்.
கல்வி கற்க முதலில் குருவானவர் மிகவும் முக்கியம். அவர் கற்றுத் தரும் கல்வி, கலை போன்றவை என்றும் நம்முடன் நிலைத்து நிற்கவும், மனதில் நன்கு பதியவும் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும். எனவே தான் கவிச் சக்கரவர்த்தியான கம்பர் சரவஸ்திதேவியைப் போற்றி, ‘சரஸ்வதி அந்தாதி’யைப் பாடினார்.