

தல வரலாறு: ஒரு முறை பிருகு முனிவர், திருமாலின் மார்பில் உதைக்க, சினம் கொண்ட மகாலட்சுமி பெருமாளை பிரிந்துபூலோகம் வந்து அரியமங்கை தலத்தை அடைகிறார்.
‘இனி என்றும் பெருமாளை விட்டு பிரியக்கூடாது’ என்று மகாலட்சுமி, சத்திய கங்கை தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வணங்கி, நெல்லிப்பழம் மட்டுமே உண்டு, தவம் செய்தார். இதன் பலனாக மகாவிஷ்ணு இந்த தலத்துக்கு வந்து தானும் சிவபெருமானை வழிபட்டு மீண்டும் மகாலட்சுமியுடன் சேர்ந்தார். இங்கு விஷ்ணுவும் சிவனை வழிபட்டதால், சிவனுக்கு ‘ஹரி முக்தீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.