

பெண்மையைப் போற்றும் விதத்திலும், மாயையுடன் போரும் அதன் வெற்றியையும் கொண்டாடும் விதமாகவும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பிரபஞ்சத்தை இயக்கும் உயிர் சக்தியைக் கொண்டாடும் இவ்விழாவின் உள்ளார்ந்த கருத்துகளைப் புரிந்து, ஒவ்வொருவரும் ஆன்மிக வளர்ச்சி பெற வேண்டும்.
சத்-தத்-ஓம் எனும் தெய்வீக முத்தன்மையுள் முதல் வெளிப்பாடாக விளங்கும் ஓங்கார அதிர்வின் சின்னமாக விளங்குபவள் தெய்வீக அன்னை. பேருண்மையின் வெளிப்படாத தன்மையாக ‘சத்’ ஆகவும், பிரபஞ்ச ஞானமாக ‘தத்’ ஆகவும், ஞானத்தின் முதல் வெளிப்பாடாக ஓங்கார நாதமாகவும் விளங்கும் பரம்பொருளை ஓங்கார அதிர்வின் முதல் உருவாக, பராசக்தியாக நம் முன்னோர் வழிபட்டனர்.