

புதுச்சேரியில் சஷ்டி விழாவுக்கும், சூர சம்ஹாரத்துக்கும் புகழ்மிக்க கோயில், காவல் தெய்வம் நாகமுத்து மாரியம்மன் வாழும் தலம், மாசி மகத்தில் புதுவை வரும் மயிலம் முருகனுக்கு விருந்தோம்பல் செய்யும் முருகனின் கோயில், பழமையான வன்னி மரத்தடியில் சனி பகவான் விளங்கும் அரிய கோயில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் கோயில் விளங்குகிறது.
புதுவை மாநகரில் முக்கியப் பகுதியாகத் திகழ்கிறது சாரம். இந்தப் பகுதியினரின் காவல் தெய்வமாக நாகமுத்து மாரியம்மன் விளங்குகிறாள். இக்கோயில் சிறப்புக்கு பழங்காலத்து பூங்குளமும், பூந்தோட்டமும் சான்றாக விளங்குகின்றன. இக்கோயிலை வைத்தே மாரியம்மன் கோயில் வீதி ஏற்பட்டது.