

வாழ்க்கையில் பலர் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுக்கு, பிற்காலத்தில் வருந்துவது உண்டு. மனசாட்சி உறுத்துவதால், ஏதேனும் அதற்கு பிராயச் சித்தம் தேடுவது வழக்கமாக உள்ளது. ஒரு ஞானியிடம் ஒருவன், “சுவாமி! நான்ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்திவிட்டேன்.
இப்போது என் மனசாட்சி உறுத்து கிறது. அதற்கு ஏதாவது பிராயச்சித்தம் கூறுங்கள்” என்று வேண்டினான். அந்த ஞானி, “நாளை காலை ஒவ்வொரு வீட்டின் முன்பும் சிறிதளவு பஞ்சை வைத்துவிட்டு வா" என்றார். அவ்வாறே செய்துவிட்டு வந்தவன், "இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவா?" என்று ஞானியை கேட்டான்.