

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்தில் ஏதேனும் கனவு காண்பது வழக்கம். அந்தக் கனவுகளில் சில கனவுகள் பலிக்கும். சில கனவுகள் பலிக்காது. அப்படி ஒருவரது கனவு பலித்ததா இல்லையா என்பதை பைபிளின் பாதையில் காண்போம். கானான் நாட்டில் தம் தந்தை வாழ்ந்த நிலப்
பகுதிகளில் யாக்கோபு என்பவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு இஸ்ரயேல் என்ற பெயரும் உண்டு. இவருக்குப் பிறந்த பன்னிரெண்டு பிள்ளைகளில் கடைசிக்கு முந்தினவராய் பிறந்தவர் யோசேப்பு. யாக்கோபு தன் வயதான காலத்தில் பிறந்தபிள்ளை என்பதால் மற்ற எல்லாப் புதல்வரையும் விட யோசேப்பு மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.