

எளிமை, தூய்மை, நன்னடத்தை, நேர்மை, நற்குணம், நற்சிந்தனை, இரக்கம், கருணை, ஆன்மிக தாகம், எல்லா உயிர்களிடமும் அன்பு இவற்றின் திரண்ட வடிமாக வாழ்ந்த அருளாளர்களின் அமுத மொழிகள், உலக வாழ்வெனும் இருட்டில் இடறி விழாமல் இருக்க உதவும். நம் சந்தேகங்கள், பிரச்சினைகளுக்கு விடைகள் மற்றும் தீர்வுகளை அவர்கள் வாழ்விலிருந்து நாம் பெற முடியும்.
அருளாளர்களை உதாரணமாக கொண்டு வாழ்வதே சிறந்தது. மனித குலத்துக்கு தேவையான உலக உண்மைகள் ஆன்றோரின் உபதேசங்களில் முக்கிய அம்சமாக இருக்கும். வாழையடி வாழையாக அவற்றை பின்பற்றினால் நாமும் நற்கதி அடையலாம். அருளாளர்களின் நான்கு முக்கிய அமுதமொழிகளாக உண்மையான மகிழ்ச்சி எது?, எமனை யாரும் ஏமாற்ற முடியாது, எப்போதும் இறைவனை சிந்திப்போம், புண்ணியம் சேர்ப்பதே மனித குலத்தின் நோக்கம் ஆகியன கருதப்படுகின்றன.