ஆனந்த ஜோதி
கல்யாண வரமருளும் கல்யாணபுரம் பெருமான்
தேவாரம் வைப்பு தலமாக போற்றப்படும் கல்யாணபுரம் இடங்கொண்டீஸ்வரர் கோயில், திருமண வரம் அருளும் தலமாக
விளங்குகிறது. இத்தலம் பற்றிய பாடல் அப்பரின் பதிகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவனும் பார்வதியும் திருமணக் கோலத்தில் இருப்பதைக் காண வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக கச்சப முனிவருக்கு (காச்யப முனிவர்) இருந்தது. இதற்காக முனிவர் காவிரிக் கரையில் தவம் செய்ய முடிவு செய்தார்.
அச்சமயம் அவருக்கு ஓர் அசரீரி வாக்கு, ‘பல லிங்கங்களைக் கண்ட இடத்தில் நீவிர் இந்த தரிசனத்தைப் பெறுவீர்’ என்று தெரிவித்தது. முனிவர் பொருத்தமான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது, இந்த இடத்துக்கு (கல்யாணபுரம்) வந்தார். தரையில் பல சிவலிங்கங்களை அவரால் காண முடிந்தது.
