

தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கற்பகநாதேஸ்வரர் (கபர்தீஸ்வரர், திருவலஞ்சுழி நாதர்) கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 88-வது தேவாரத் தலம் ஆகும்.
சோழர்களால் கட்டப்பட்ட இத்தலத்தில் உள்ள விநாயகர் பாற்கடலில் இருந்த அமுதமயமான கடல் நுரையால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என்று அழைக்கப்படுகிறார். அசுரர்கள் தேவர்களை கொடுமைப்படுத்துவது என்பது எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.