

சிவனருள் பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவை 11-ம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. காரைக்கால் நகரில் வாழ்ந்த தனதத்தன் - தர்மவதி தம்பதியின் மகளாகப் பிறந்த புனிதவதி, சிவபெருமான் மீது பக்தி கொண்டு வளர்ந்து வந்தார்.
உரிய வயதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த பெரும் வணிகரின் மகன் பரமதத்தனுக்கு மணம் முடிக்கப்பட்டார். புனிதவதியார் சிவபெருமான் மேலுள்ள பக்தி சிறிதும் குறையாமல் இல்லற தர்மத்தை தவறாமல் நடத்தி, சிவத்தொண்டர்களுக்கு இன்னமுது அளித்து சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தார்.