

உலகிலுள்ள எல்லா உயிர்களின் மதிப்பும் ஒன்றுதான். வடிவம் மட்டுமே மாறுகிறது என்பதை உணர்வதே ஞானம். இதுவே நான்கு வேதங்களின் சாரம். மனித நேயம் எனும் உலக உயிர்களிடம் அன்பு காட்டும் குணத்தை வளர்த்துக் கொள்வோம்.
அது ஒரு மழைக் காலம். ரிஷிகேஷ் நகரில் கங்கை நதி கரை புரண்டு பொங்கி பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஒரு படித்துறையில் ஒரு துறவி மந்திரம் ஜபித்தபடி, மும்முறை மூழ்கி எழுந்தார். கண் திறந்து பார்த்தபோது, ஒரு தேள் ஆற்று வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், மரண பயத்தில் தத்தளிப்பதை பார்த்தார்.