

வாழ்க்கை யாருக்கும் ஒருபோதும் தவறாக இருக்கவில்லை. அதை நாம் பார்க்கும் பார்வைதான் இதுவரை தவறாக இருந்தது. இப்போது, அந்த தவறான பார்வையை விடுத்து, வாழ்வை அது இருக்கும் வண்ணமே, நேரடியாகப் பார்த்தால் அங்கே, நமக்குப் பொருந்தாத வாழ்க்கை என்ற தவறான எண்ணம் மறைந்து, ஒவ்வொரு கணத்திலும் பேரானந்தத்தை உணரலாம்.
அமைதியாக சலனமின்றிச் செல்லும் வாழ்க்கையில் திடீர் என்று நம்மில் சிலருக்கு, யாரோ ஒருவர் கட்டமைத்த பாதையில் பயணிக்கும் நதியைப் போல, நம் வாழ்க்கை திசைமாறிச் செல்வதாக ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றும்.