

திருவோண நட்சத்திரத்துக்கு உரிய கோயிலாக, திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் போற்றப்படுகிறது. இக்கோயிலில் மூலவர் செங்கோலுடன் ராஜகோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது மார்பின் இரு பக்கத்தில் இரண்டு மகாலட்சுமி வாசம் செய்கின்றனர்.
திருவாசியில் ஆதிசேஷன் உள்ளார். மனதுக்குள் தோன்றுதல் என்பதே பிரசன்னம் என்பதன் பொருள் ஆகும். திருமலை நாயக்க மன்னர் ஒருமுறை பிரசன்ன வெங்கடேசரை மனதில் கண்டார். அந்த பெருமாளுக்கு தல்லாகுளம் என்ற இடத்தில் கோயில் எழுப்பினார்.