

ஆழ்வார்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிப்பொழுதும், ஒவ்வொரு நொடியும் இறைவனைப் போற்றி ஆனந்தம் அடைகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை உண்ணும் உணவு, பருகும் நீர், இருக்கும் இடம், பிற செல்வங்கள் என அனைத்தும் பரம்பொருளே ஆகும்.
ஆழ்வார்கள் பகவான் மீதுள்ள தங்கள் அன்பை நான்கு விதமாக வெளிப்படுத்தி உள்ளார்கள். அவை தூது, மடல் ஏறுதல், ஊடல், அணுகாரம் என்பதாகும். இதில் தூது என்பது அறிவிக்கை. அதாவது பெருமாள் மீதுள்ள தன் தீவிர அன்பை உணர்த்த குருவி, நாரை, அன்றில் பறவை, அன்னப்பறவை, வண்டு, குருகு, மேகத்தை தூதாக அனுப்புகின்றனர்.