

வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டை செய்து, தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோயில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஒரு சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளன. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.