

அறுபடை வீடுகளில் ஒன்றாகவும், பஞ்சகுரோச தலங்களில் நான்காவதாகவும் விளங்கும் சுவாமிமலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் தமிழ்க்கடவுள் சுவாமிநாத சுவாமி ஈசனின் இணை வடிவமாக வழிபடப்படுகிறார். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவத்தை உபதேசம் செய்த சிவகுருநாதனாக முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார்.
ஒருமுறை சிவபெருமானை காண பிரம்ம தேவர் வந்திருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தையான முருகப்பெருமான் பிரம்மனை நோக்கி பிரணவத்தின் பொருள் என்ன? என கேட்டார். பிரம்மன் தயங்கி தெரியாது என்றார். உடனே அவர் சிறையில் அடைத்து விட்டார் முருகப் பெருமான்.