

உடலில் உயிர் இருக்கும் வரை ஒரு பொருள் மீதான பற்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உற்றார், உறவினர், பதவி, பணம் என்று ஒருவருடைய விருப்பம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இவையெல்லாம் நிலையானவை என்று யாராலும் உறுதிபட கூற இயலாது. உறுதியான பொருள் பரம்பொருளே. ஒருவருக்கு பிரச்சினை ஏற்படும் போது மட்டுமே இறை சிந்தனை வருகிறது. அப்போது நமக்கு அவர் மிக மிக நெருக்கமானவராகத் தெரிகிறார்.
இந்த உணர்வே கடவுளுடன் நமக்கிருக்கும் பிரிக்க முடியாத, நிலையான, அழிவற்ற உறவை பலப்படுத்தும்.தானம், தர்மம், வழிபாடு, ஜபம், தியானம், ஆலய தரிசனம், மகான்களின் சமாதிகளை வணங்குதல் ஆகியன அருளாளர்கள் பயணித்த பாதை. உலக மாயைகளில் சிக்காமல் இருக்க ஆதிசங்கரர், ராமானுஜர், மாத்வர் போன்ற பேரருளாளர்களின் ஆன்ம போதனைகளை பின்பற்ற வேண்டும். இவை 24 காரட் சொக்கத் தங்கத்துக்கு ஒப்பானவை. இறை நம்பிக்கை என்ற வைரம் நமக்கு இப்போது தேவை. இறைவனிடம் சரணடைவோம். சொல், செயல், சிந்தனை எல்லாம் பிரார்த்தனையில் நிறையட்டும்.