

கும்பகோணம் என்கிற பெயரைக் கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கோயில்கள், மகாமகம் குளம், வெற்றிலை, தற்சமயம் எல்லோராலும் பேசப்படும் டிகிரி காபி என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கலை, கலாச்சாரம், பண்பாடு, விவசாயம், ஆன்மிகம் போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் ஓர் ஆன்மிக புண்ணிய பூமி தான் கோயில் நகரம் என அழைக்கப்படும் கும்பகோணம் (குடமூக்கு திருக்குடந்தை).
பூ வணத்தவன் புண்ணியன்
நண்ணி அங்கு
ஆவணத்து உடையான்
அடியார்களை
தீ வணத் திருநீறு மெய்பூசியோர்
கோவணத்து உடையான்
குடமூக்கிலே.