

ஒரு மனிதர் முழு விழிப்புணர்வுடன் வாழ்ந்தால், எவ்வித கட்டமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் மனதளவில் சுதந்திரமாக சிந்திக்க முடியும். புற உலகிலும் சுதந்திரமாக செயல்பட முடியும். இதுவே மனிதனின் உண்மையான சுதந்திரம்.
மனித வாழ்க்கை ஒரு புதிரான நாவல் போன்றது. நாம் எப்போது, எங்கே பிறக்க வேண்டும் என்று தேர்வு செய்ய முடியாது. எப்போது, எவ்வாறு மரணிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியாது. இவை இரண்டும் நம்முடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. இந்த இரண்டு எல்லைகளுக்கிடையே உள்ள வாழ்க்கையை மட்டும் நம் விருப்பம் போல் சுதந்திரமாக வாழ முடியும் என்று நம்புகிறோம்.