

சிலந்தி (சீ), பாம்பு (காளம்), யானை (அத்தி) ஆகிய மூன்று சிற்றறிவு உயிர்களும் தங்கள் ஆத்மார்த்த பக்தியால் முக்தி பெற்ற தலம் ஸ்ரீகாளஹஸ்தி. இவை மூன்றுக்கும் பரம்பொருளாகிய ஈசன் அளித்த வாக்கின்படி சீகாளத்தி என்ற பெயரால் இத்தலம் அழைக்கப்படுகிறது.
திருக்காளத்தி மலை அடிவாரத்தில், பொன்முகலி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் பொத்தப்பி நாடு என்ற பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த வனங்கள் நிறைந்த உடுப்பூர் என்ற சிற்றூர் இருந்தது. அங்கு, வேடர் குல தலைவன் நாகன் - தத்தை தம்பதியின் மகனாக திண்ணன் வளர்ந்து வந்தான்.