

எமதர்மராஜன் தனி கோயில் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆகும். இத்தலத்தை ஒரு கணம் நினைவில் துதித்தாலும், நாவால் உச்சரித்தாலும் இத்தல புராணத்தை பாதுகாத்து வந்தாலும் பாவங்கள் நீங்கி முக்தி அருளப்படும் என்பது ஐதீகம்.
தேவார மூவராலும் மாணிக்கவாசகப் பெருமானாலும் அருணகிரிநாதராலும் பாடல் பெற்று பூலோக கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி கோயில் காவிரி தென்பால் உள்ள பாடல் பெற்ற 70-வது தலமாகும். சோழர் காலத்தில் கம்பீர சதுர்வேதி மங்கலம் என ஸ்ரீவாஞ்சியம் அழைக்கப்பட்டது.