

பழங்கால இதிகாசமான ராமாயணத்தை கம்பர் தன் வரிகளால் கம்ப ராமாயணமாக வடித்து தந்திருக்கிறார். அப்பெரும் காப்பியம் மனித இயல்புகளின் மீதும் அவற்றின் விழுமியங்கள் மீதும் நன்மை தீமைகளின் மீதும் இப்பெரும் சமூகத்தின் ஒரு சாதாரண உறுப்பினராகவும் சட்டம் சார்ந்த பிரதிநிதியாகவும், நமக்குள் எதிரொலிக்கும் குணங்களை ஆழமானதொரு சுய பரிசோதனை செய்துப் பார்க்க நமக்கு வாய்ப்பு அளிக்கிறது.
ஓர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக என்னுடைய பணி நீதியின் மீதும் நேர்மையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை, அர்ப்பணிப்பை கோருகிறது. ஆயினும் ஒரு நீதிபதி எனும் தன்மையை தாண்டி உணர்ச்சிகளின் சிக்கல்களும் உறவுகளின் சங்கிலிகளும் பிணைத்திருக்கும் ஒரு சாதாரண மனிதனாகவும்தானே நான் இருக்கிறேன்?. கம்ப ராமாயணத்தை பற்றி பேசுவதற்கான ஓர்அழைப்பு வந்தபோது அதன் முக்கிய கதாபாத்திரங்களின் பண்பு, சூழலைப் பொறுத்து எவ்வாறு எனக்குள் வெளிப்படுகின்றன என்பதை உள்முகமாக சிந்தித்தேன்.