

உலகில் பல மலைகள் காணப்பட் டாலும், இமயமலை போல் எந்த மலையும் ஆன்மிகத்துடன் இணைத்து பேசப்படுவதில்லை. இந்து சமயத்தினர் மட்டுமல்லாது, பௌத்தர்களும் இமயமலையை வணங்கி வருகின்றனர்.
முனிவர்கள், யோகிகள், தத்துவவாதிகள் என பலர் இமயமலையில் வசித்துள்ளனர். நம் கண்களுக்குப் புலப்படாத பல மகான்களும் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது, சிவபெருமான் வாசம் செய்யும் இடமாக இமயமலை கூறப்பட்டாலும், மகாவிஷ்ணுவுக்கு உகந்த இடமாகவும் இம்மலை போற்றப்படுகிறது.