

வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நமக்கு முக்கியமானது. சில சமயம் எதிர்மறை எண்ணங்களால் நம் வளர்ச்சி தடைபடுகிறது. நம்முடைய இயலாமை நம்மை திசை திருப்பிவிடுகிறது. இயலாமையை வெற்றி கண்டால், வாழ்வில் இனிமையைக் காணலாம்.
நவீன வாழ்க்கையை தீர்க்கமான ஒரு கோடு பழமையில் இருந்து வேறு படுத்துகிறது. வாழ்வு எப்போதும் நவீனமாகவே இருக்கும். நாம் பழமை என நினைக்கும் ஒரு சகாப்தம், நம் முன்னோர் காலத்தில் புதுமையாக இருந்தது. இது எக்காலத்துக்கும் பொருந்தும். பலதரப்பட்ட நிகழ்வுகளை நாம் தினமும் எதிர்கொள்ள வேண்டியிருப் பதை நவீனம் என்ற சொல் உண்மையில் உணர்த்துகிறது.