

108 வைணவ திவ்ய தேசங்களில் தெற்கு நோக்கி அமைந்துள்ள தலங்களுள் ஒன்றாக பால வியாக்ரபுரம் என்று அழைக்கப்படும் திருச்சிறுபுலியூர் தலசயன பெருமாள் கோயில் விளங்குகிறது. ஸ்ரீரங்கத்தில் பெரிய வடிவில் சயன கோலத்தில் அருளும் பெருமாள் இத்தலத்தில் பாலகனாக சயன கோலத்தில் அருள்வது தனிச்சிறப்பு.
ஒருசமயம் ஆதிசேஷனுக்கும், கருடாழ்வாருக்கும் பகை ஏற்பட்டது. இந்தப் பகை நீங்குவதற்காக, ஆதிசேஷன் இத்தலத்துக்கு வந்து பெருமாளை நோக்கி தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், மாசி மாத வளர்பிறை ஏகாதசி தினத்தில் காட்சி அருளினார். மேலும் ஆதிசேஷனை தனது அனந்த சயனமாக மாற்றிக் கொண்டு, குழந்தை வடிவில் சயனகோலத்தில் இங்கு சேவை சாதிக்கத் தொடங்கினார்.