

திருக்கொளுவூர் ஆதி நாகநாத சுவாமி, வேண்டும் வரம் அருளும் இறைவனாக பக்தர்களால் போற்றப்படுகிறார். வைகாசி விசாகத் திருநாள் பிரம்மோற்சவத்தின்போது பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் திருக்கொளுவூர் பகுதி, துகவூர்க் கூற்றம் என்ற உள் நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது. அப்போது இவ்வூருக்கு கூவிளபுரம் என்ற பெயர் இருந்தது.