

தில்லை, புலியூர் என்று அழைக்கப்படும் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் புற்று மணலில் உருவாக்கப்பட்ட தலமாக ஆனந்தீஸ்வரர் கோயில் அறியப்படுகிறது. ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அடுத்தபடியாக சிதம்பரத்தில் உள்ள ஆனந்தீஸ்வரர் தான் மணலால் அமைந்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலை விட மிகவும் பழமை வாய்ந்த தலமாக இத்தலம் உள்ளது.
பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமாலின் எடை ஒருசமயம் வழக்கத்தை விட அதிகமாகத் தெரிந்தது. அவரைத் தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷன். அதற்கான காரணத்தை கேட்டார். சிவபெருமானின் நடனத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகமாகத் தெரிந்ததாக திருமால் கூறினார்.