

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள், ஸ்ரீ வைணவ பாரம்பரியத்தையும், இறைவனை அடைய தான் கண்ட கனவையும் உலகம் அறியச் செய்யும் வண்ணம், 143 ஸ்லோகங்களைக் கொண்ட நாச்சியார் திருமொழியை இயற்றியுள்ளார். திருமொழிகளில் ‘வாரணமாயிரம்’ எனத் தொடங்கும் பாசுரம் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
இதில் ஆண்டாள் தனது அவதாரத்தின் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறார். தான் கண்ட கனவை தனது தோழிகளிடம் பகிர்ந்து கொள்கிறார். திருமாலை அடைய முயற்சிக்கும் ஆண்டாள், தன் மனதில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அமைதியின்மை குறித்து 143 பாசுரங்களில் விளக்கியுள்ளார்.