

நம்பியோருக்கு நலமே நல்கும் வேம்பத்தூரிலுள்ள பூமிநீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்களின் தேக ஆரோக்கியத்துக்கு விபூதி வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள வேம்பத் தூரில் பூமிநீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இதனால், இவ்வூருக்கு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயரும் உண்டு. சிற்ப சாஸ்திர காலத்துக்கு முன்பே கல்லையே உளியாகக் கொண்டு வடிக்கப்பட்ட மூலவர் சிலை உள்ளது.
குலசேகர பாண்டிய மன்னன் வறட்சியை போக்கி நீர்வளம், நிலவளம் செழிப்பாக இருக்க 2008 அந்தணர்களை அழைத்து யாகம் செய்தார். 2008 அந்தணர்கள் தஞ்சை பகுதியிலிருந்து வந்து யாகம் நடத்தியதால், மழை பொழிந்து விளைச்சல் பெருகியது. யாகம் செய்த அந்தணர்களுக்கு நிலம் கொடுத்து தங்க வைத்தார். அப்போது, 2007 அந்தணர் இருந்தனர், ஒருவர் எண்ணிக்கை குறைந்தது. அப்போது 2008-வதாக முழு முதற்கடவுளான விநாயகரே அந்தணராக வந்து நிலம் பெற்றது வேம்பத்தூராகும். இங்குள்ள கணபதி ஊரின் குளக்கரையில் 2008 கணபதியாக வீற்றிருந்து வேதம் சொல்லித் தருவதாக ஐதீகம்.
இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்குள்ள பெருமாள் கல்வி, செல்வம் இரண்டுக்குமே அதிபதியாக உள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பரும், காளமேகப் புலவரும் இங்கு வழிபட்ட தாக நம்பப்படுகிறது. மேலும், பிள்ளையார், 18-ம் படி கருப்பண்ணசாமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி பூவராகர் சந்நிதிகள் உள்ளன.
11-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த கவிராஜ பண்டிதர் இந்த பெருமாளை வழிபட்டு, ஆதிசங்கரர் இயற்றிய சவுந்தர்யலகரி மற்றும் ஆனந்த லகரியை தமிழில் மொழி பெயர்த் துள்ளார். இங்குள்ள பூவராகர், பூமாதேவியை மடியில் வைத்துள்ளார். எல்லா தெய்வமும் நம்மை பார்த்திருக்கும்போது பூமாதேவியை பூவராகர் பார்த்திருப்பார். இதனால், இவரை வேண்டினால் நிலம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். இவரிடம், வெள்ளைத்தாளில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை விண்ணப்பமாக எழுதி சமர்ப்பித்தால், காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம், இந்திராட்சி, தன்வந்திரி மந்திரங்களுடன் விபூதியில் சுதர்சன சக்கரம் போட்டு சிறப்பு பூஜைகள் செய்து, மந்திர விபூதியாக பக்தர்
களுக்கு வழங்கப்படுகிறது. விஷ்ணு தலத்தில் விபூதி வழங்கப்படுவது இங்குதான். இதனை தண்ணீருடன் கலந்து குடித்தால் பல்வேறு நோய்களும் தீரும் என்பதும், தேக ஆரோக் கியம் கிடைக்கும் என்பதும், பக்தர்களின் நம்பிக் கையாக திகழ்கிறது. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் இங்கு பேனாவை வைத்து வழிபட்டுச் செல்கின்றனர்.
இது விண்ணகர கோயிலாகும். இங்கு காலை 6 முதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் பெருமாளை சேவிக்கலாம்.