கலைகளுள் மேன்மை பொருந்திய பஞ்ச பட்சி சாஸ்திரம்
கலைகளுள் மிகவும் மேன்மை பொருந்தியதாக போற்றப்படும் பஞ்ச பட்சி சாஸ்திரம், சிவபெருமானால் பார்வதிதேவியிடம் கூறப்பட்டதாக ஐதீகம். இந்தக் கலையை அறிந்திருந்தால், அனைத்திலும் வெற்றி காணலாம் என்று சான்றோர் பெருமக்கள் கூறுவர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக காகபுஜண்டர் அருளிய ஜோதிட உயிர் நிலை சாஸ்திரமே பஞ்ச பட்சி சாஸ்திரம். பஞ்ச என்றால் 5 என்றும், பட்சி என்றால் பறவை எனவும் பொருள்படும். இதன்படி ஐந்து பறவைகளை வைத்து 27 நட்சத்திரங்களுக்கு பலன் சொல்வது பஞ்சபட்சி சாஸ்திரம் எனப்படும்.
வல்லூறு (அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம்), ஆந்தை (திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்), காகம் (உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்), கோழி (அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்), மயில் (திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி) என நட்சத்திரங்கள் வகைப் படுத்தப்பட்டுள்ளன.
