

மதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இடமாக இருந்தாலும், அனைத்து மதத்தினரும் கண்டு மகிழ்வதற்கு ஏராளமான விஷயங்கள், உலகிலேயே மிகவும் சிறிய நாடாக விளங்கும் வாடிகனில் உள்ளன. நகரத்துக்குள் ஒரு நாடு என்கிற விசித்திரமான பெருமை கொண்ட வாடிகன், இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ளது.
மதம் என்பதையே ஒரு நோக்கமாகக் கொண்ட நாடு என்பதால், வாடிகனில் ராணுவம் கிடையாது. பிறநாடுகளுடன் வணிகம் கிடையாது. வாடிகனின் கணக்குப்படி மக்கள் தொகை வெறும் ஆயிரம்தான். (போப்பின் அலுவலக அறைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல்!). வழிவழியாக போப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசுகள்தான் வாடிகனின் தலைவராக விளங்கி வருகின்றனர்.