

கோயிலையும் பூஜையறைகளையும் கடந்து, ஒரு பண்பாட்டு அடையாளமாகவே முருகப் பெருமான் விளங்குகிறார். காலனிய கிறிஸ்தவ சமயப் பண்பாடு முன்வைக்கப்பட்டபோது, தமிழ்ச் சமூகம் முருக வழிபாட்டை முன்வைத்தது. இலங்கையில் இந்தப் போக்கு மிகத் தீவிரமாக வெளிப்பட்டது. 1800-களில் இலங்கைக்கு வந்த அயல்நாட்டுப் பயணி வின்சிலோவின் நாட்குறிப்புகள் இதற்கு ஒரு சான்று.
கதிர்காமம் என்பது இலங்கையில் தமிழர்களுக்கு உணர்வில் கலந்த ஒரு திருத்தலம். கதிர்காமத்தில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுள் குறித்து பதுளை சமத்துவச் சங்கத் தலைவராகப் பணியாற்றிய அறிஞர் வ. ஞானபண்டிதன் சைவபோதினி என்னும் இதழில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வந்தார். அவை தொகுக்கப்பட்டு 1940-ல் சைவ பிரகாச சபையால் புத்தகமாக வெளியிடப்பட்டன. அந்த நூல் கதிர்காம முருக வழிபாட்டின் பின்னணியில் உள்ள சமூக, பண்பாடு, வரலாற்றுக் கூறுகளை விளக்குவதாக உள்ளது.
இந்நூலை இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பணிபுரிந்த கலாநிதி செல்லத்துரை சுதர்சன் பதிப்பித்தார். இந்நூலின் 8-வது பதிப்பு அண்மையில் பழநியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் வெளியிடப்பட்டது. கலை ஒளி முத்தையா அறக்கட்டளையின் சார்பில் நூல்கள் வெளியிட்டு வரும் எச்.எச். விக்கிரமசிங்கே இந்நூலை முருகன் விழாவில் அன்பளிப்பாக வழங்கினார். கதிர்காமத் திருமுருகன், பதுளை வ. ஞானபண்டிதன், கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை இலவச வெளியீடு
கதிர்காமத் திருமுருகன், பதுளை
வ. ஞானபண்டிதன், கலைஒளி
முத்தையாபிள்ளை அறக்கட்டளை
இலவச வெளியீடு
தொடர்புக்கு: 7904234166