கண்ணனின் சிறப்பு கவனம் பெற்ற பக்தர் - நரஸிங் மேத்தா

கண்ணனின் சிறப்பு கவனம் பெற்ற பக்தர் - நரஸிங் மேத்தா
Updated on
2 min read

சிவபெருமான் அழைத்துக் கொண்டு போய் கிருஷ்ண தரிசனம் செய்துவைத்த நிகழ்வு நரஸிங் மேத்தா என்ற பக்தரின் வாழ்வில் நிகழ்ந்துள்ளது. இதனால் கண்ணனின் சிறப்பு கவனத்தை, நரஸிங் மேத்தா பெற்று, துன்பங்களில் இருந்து மீள்கிறார்.

ஒரு வைணவனின் உண்மையான குறியீடுகள் என்ன என்பதை விளக்கும் ‘வைஷ்ணவ ஜனதோ’ என்ற பாடலை இயற்றியவர் நரஸிங் மேத்தா. காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

குஜராத்தி மொழியில் கண்ணன்மீதும், ஸாது மகிமை, நாம மகிமை ஆகியவை பற்றியும் 22,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். குஜராத் அரசு இலக்கியப் படைப்புகளை கௌரவிக்கும் வகையில் சிறந்த படைப்புகளுக்குநர்ஸி மேத்தா (நரஸிங் மேத்தா) விருதுவழங்குகிறது. இவர் உருவம் பொறித்ததபால் தலையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இத்தகைய பெருமைகள் வாய்ந்த பக்தரின் வாழ்வில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள், சமூக வாழ்க்கை. அவமானங்கள் அனைத்தையும் கிருஷ்ண பரமாத்மாவே தீர்த்துவைக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் ஜுகந்த் என்ற குக்கிராமத்தில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் நரஸிங் மேத்தா. இவர் 5 வயதாக இருக்கும்போது பெற்றோர் இருவருமே இறைவனடி சேர்ந்துவிட, அண்ணன்களின் பொறுப்பில் வளர்ந்தார்.

அண்ணிகள் இவரது படிப்புக்குத் தடை விதித்ததோடு நில்லாமல் கொடுமைப்படுத்தவும் தொடங்க, ஒரு நாள்அழுதுகொண்டே ஊர்க்கோடியில் இருந்த கோப்நாத் மஹாதேவ் கோயிலில்வந்து அமர்ந்தார்.

பசியோடு அழுதுகொண்டே இரவில் தன் கோயிலில்வந்து அமர்ந்திருக்கும் குழந்தையைப் பார்த்ததும் மஹாதேவரின் கருணைஅவரது தலையில் இருக்கும் கங்கையைவிட வேகமாகப் பாய்ந்து, குழந்தையை வாரியணைத்துப் பசியாற்றி, வான்வழியே பிருந்தாவனம் அழைத்துப்போனார்.

ராஸலீலையைக் காண தினமும் வரும் மஹாதேவர் இன்று ஒருகுழந்தையை அழைத்து வந்திருப்பதைப் பார்த்தார் கண்ணன். ராதாமாதவயுகளத்தின் பார்வை பட்டதும் நர்ஸிங்மேத்தாவை பக்திதேவி அரவணைத்துக் கொண்டாள்.

குஜராத் திரும்பியதும் நர்ஸியின்வாயிலிருந்து கவிநயம் மிக்க கவிதையருவி கொட்டத் தொடங்கியது. கண்ணனின் லீலைகள், அவரது மகிமை, நாமமகிமை, சிவமகிமை எல்லாம் அவரதுபாடல்களின் பொருளாயின. உதாசீனப்படுத்தியவர்கள் அனைவரும் கொண்டாடத் தொடங்கினர்.

திருமணம் செய்துவைத்து சிறிய அண்ணன் தனக்குச் சொந்தமான ஒரு வீட்டிலேயே குடிவைத்தார். இருப்பினும் கைக்கும் வாய்க்குமான நிலைதான். பக்திச்செல்வம் நிரம்பியிருந்தால் கவலையின்றி நிம்மதியாக வாழ்ந்தனர். ஷ்யாமள்தாஸ் என்ற மகனும், குன்வர்பாய் என்ற மகளும் பிறந்து வீட்டை நிறைக்க, ஸத்சங்கம் களை கட்டியது.

நாகர் அந்தண வகுப்பைச் சேர்ந்தநர்ஸி, கண்ணன்மீது பக்தி கொண்டிருப்பதைக் கண்ட அவ்வகுப்பினர், வெளியூரிலிருந்து வந்த ஒரு பணக்காரப் பண்டிதரிடம், நர்ஸி பற்றி பெரிய பணக்காரர் என்பதாகச் சொல்லிவைக்க, அவர்நர்ஸி வீட்டுக்கு வந்தார். அக்குடும்பத்தின் தெய்வீகச் சூழ்நிலை பிடித்துப்போக, ஷ்யாமள்தாஸுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துவைக்க விரும்பினார்.

பெரிய பணக்கார வீட்டின்திருமணம் என்பதால் ஊரே திரண்டுவர, நர்ஸியோ கண்ணனைத் திருமணத்துக்கு அழைத்தார். கண்ணன் ஒரு பெரியசெல்வந்தர் உருவில் தேரில் வந்திறங்கி அத்தனை ஏற்பாடுகளையும் தானே முன்னின்று நடத்தி திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரையும் ஒருகுறைவுமின்றி கவனித்து அனுப்பிவைத்தார்.

இதைப் பொறுக்காத சிலர் அடுத்தடுத்து சூழ்ச்சி செய்யத் தொடங்கினர். வெளியூரிலிருந்து வந்த யாத்ரீகர் கூட்டம் ஒன்றில்போய், “நர்ஸி பெரிய செல்வந்தர். வழியில் கள்வர் பயம் இருப்பதால் தங்கள் கைப்பொருளை அவரிடம் கொடுத்து புரோநோட்டாக எழுதி வாங்கிக்கொள்ளுங்கள்.

துவாரகா சென்றதும் அந்த நோட்டை எந்தசத்திரத்தில் காட்டினாலும் அவர்கள் யாத்திரைக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் நர்ஸியின் கட்டளைப்படி செய்து தருவர்” என்று ஒருவர் வதந்தி பரப்ப, அதை நம்பிக்கொண்டு அந்த யாத்ரீகர் கூட்டம் தாங்கள் வைத்திருந்த பணத்தை நர்ஸியிடம்கொடுத்து ரசீது கேட்டனர். ஒன்றும் புரியாத நர்ஸி, எல்லாம் கண்ணன் செயல் என்று, பெற்றுக்கொண்ட பணத்துக்கு ரசீது கொடுத்து அனுப்பிவிட்டார்.

துவாரகையில் கண்ணனைத் தவிரவேறொருவரையும் நர்ஸிக்கு தெரியாது. அப்பாவியான நர்ஸிக்குக் கெட்டபெயர் வந்துவிடக்கூடாதென்று நினைத்த கண்ணன், தானே முன்னின்று அந்த யாத்ரீகர்களை வரவேற்று,அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து, தரிசனமும் செய்துவைத்து வழியனுப்பி வைத்தார். திரும்பும் வழியில் அவர்கள் ஜுகந்த் கிராமத்துக்கு வந்து நர்ஸியிடம் நன்றி தெரிவிக்கும்போதுதான் நர்ஸிக்கு விஷயமே புரிந்தது.

மகளான குன்வர்பாய்க்கும் கண்ணனே முன்னின்று ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் திருமணம் பேசிமுடித்து, நடத்தியும் கொடுத்தார். அதோடு நிற்காமல், குன்வர்பாயின் சீமந்தம், பிரசவச் செலவுகள் அனைத்தையும், “நான்தான் ஷ்யாம்தாஸ், நர்ஸியின் சீடன்” என்று சொல்லிக்கொண்டு வந்து நடத்திவைத்துவிட்டுப் போனார்.

தன் வாழ்வில் கண்ணன் பங்கேற்று நடத்திய அத்தனை லீலைகளையும் பாடல்களாக நர்ஸி எழுதியுள்ளார். அவருடைய உறவினர், வகுப்பினர், சமூகத்தினர் அனைவரும் வெறுப்புமற்றும் பொறாமையால் படாதபாடுபடுத்தியும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஒருவரால் வாழமுடியும் என்றால் அதற்கு அவர் கண்ணனின் மீது கொண்ட பக்தியே காரணமாகும். கிருஷ்ண பக்தி என்பது அவ்வுலக வாழ்வுக்கு மட்டுமல்ல, இவ்வுலக வாழ்வை இனிமையாக்குவதற்கும் இன்றியமையாததாகும்.

- balasivak@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in