

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் எழுந்தருளியுள்ள கொருமடுவு பால தண்டாயுதபாணி கோயிலில் வைகாசி 26 (ஜூன் 8-ம் தேதி), சுயம்வரா பார்வதி யாகம் நடைபெற உள்ளது.
கொங்கு மண்டலத்தின் சிறப்பான திருமண பரிகாரத் தலமாக விளங்கி வரும் இக்கோயிலில் கணபதி ஹோமத்துடன் தொடங்கும் சுயம்வரா பார்வதி யாகத்தில் கால பைரவர் வழிபாடு, நவக்கிரக வழிபாடு, மாங்கல்ய தோஷ வழிபாடு, வாழை மர பரிகார வழிபாடு, பாலைமர வழிபாடு, ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சிசுஹத்தி தோஷம், ருது தோஷம் போன்றவை விலக தனித்தனி வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இதைத் தொடர்ந்து ஏகபாத மூர்த்தி வழிபாடு, குலதெய்வ வழிபாடு, மகாவிஷ்ணு வழிபாடு, சிவன் சக்தி மற்றும் ‘முருகன்–வள்ளி–தெய்வானை’ சந்நிதிகளில் பூ போட்டு திருமண வரம் கேட்கும் வழிபாடுகள் போன்றவையும் நடைபெறும்.
வாழை மரம், பாலை மரம், கருந்துளசி, தொட்டாச்சிணுங்கி போன்ற தெய்வீக செடிகளுக்கு சிறப்பு பூஜை செய்து திருமணத் தடைகளை நீக்க வழிவகை செய்கின்றனர். இந்த யாகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான சாபங்கள், கிரக தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி, கொடுமுடி, காளஹஸ்தி, திருப்பதி, வைத்தீஸ்வரன் கோவில், பவானி கூடுதுறை, நவக்கிரக கோயில்கள் உள்ளிட்ட கோயில்களில் செய்யப்படும் அனைத்து பூஜை வழிபாடுகளும், கிரக தோஷ நிவர்த்திகளும் இங்கு முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இந்த யாகம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 9790591091 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.