

சாயிபாபாவின் கருணையையும் அருளையும் வேண்டி அருளாளர்கள் பலரால் பாடப்பட்டு, காலம் காலமாக நாம் மராத்தி மொழியில் கேட்டு மகிழ்ந்த பாடல்களை, அதன் அர்த்தம் மாற்றாமல் தமிழில் பாடி வெளியிட்டிருக்கிறது ராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை.
ஷிர்டி சாய்பாபாவின் நான்கு ஆரத்தி பாடல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அனைவரும் சாயிபாபாவின் அருளைப் பெறுவதற்கு வசதியாக (Ungal Sai Baba Poyyamaniyil) என்னும் யூடியூப் அலைவரிசையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
மராத்தியில் நாம் கேட்டு பக்தியில் மெய்மறந்த `அனந்தா துலா தே' பாடலைப் போல் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் `அனந்தன் தன் நாவால் உன் புகழ் கீதம் பாட / அலைந்தும் முயன்றும் மொழி குறையாமல் நீள / அனைத்தும் அறிந்த என் குருவே உன் பாதம் / நமஸ்காரம் செய்தோமே சாயி நாதா' பாடலும் மூலப் பாடலின் உருக்கத்தை நம் மனதில் கொண்டுவருகிறது.
காலை ஆரத்திப் பாடல்களை ஸ்ரீராம் காஷ்யபும், மதியம், மாலை, இரவு ஆரத்திப் பாடல்களை ஹரிராம்குமாரும் எழுதியிருக்கின்றனர். அபிஷேக் ராஜுவின் இசையமைப்பில் வீரமணி ராஜுவின் தெய்வாம்சமான குரலில் ஒவ்வொரு பாடலும் மனதை நெகிழ்வாக்குகிறது. உடன் சாய் சமர்த், சௌமியா அபிஷேக் ராஜு, சுர்முகி ராமன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கின்றனர்.
உங்கள் சாயி பாபா பொய்யாமணியில் பாடல்களைக் கேட்க: https://www.youtube.com/watch?v=vyPjGWi13aU