

பன்னிரண்டு இஸ்லாமிய மாதங்களின் சிறப்புகளையும் இஸ்லாமிய அருளாளர்களின் போதனைகளையும் மனித சமூகத்தை நல்வழிக்கு கொண்டுசெல்லும் கருத்துகளையும் இசையுடன் கூடிய பாடல்களாக்கியிருக்கின்றனர்.
முதலாம் மாதமான முஹர்ரம் தொடங்கி பன்னிரண்டாம் மாதமான துல்ஹஜ்ஜு வரை ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய சிறப்பை, அம்மாதத்திற்கே உரிய மாண்பை, வழிபாடுகளைப் பற்றிய செய்திகள் பாடல் முழுவதும் நம்மை வழிடத்துகின்றன.
முதலாம் மாதம் முஹர்ரத்தில் முத்து நபி பேரர் இமாம் ஹுசைன் நினைவைப் போற்றுவோம். இரண்டாம் மாதம் ஸஃபர் மாதத்தில் ஸாகிப் அப்பா கொடியேற்றுவோம். மூன்றாம் மாதமான ரபீவுல் அவ்வல் முத்து நபிகள் உதித்த சிறப்புக்குரிய மாதம். நான்காம் மாதமான ரபீவுல், ஆகிர் குவலய குத்புகள் நினைவைப் போற்றும் மாதம். ஐந்தாம் மாதமான ஜமாதுல் அவ்வல் மாதத்தில் முத்துப்பேட்டை ஒலி நாதரைப் போற்றிடுவோம்.
ஆறாம் மாதமான ஜமாதுல் நாகூர் நாயகரின் புகழ் பாடும் நல்ல மாதம். ஏழாம் மாதமான ரஜப், அஜ்மீரின் தவராஜரின் அருள் வேண்டும் மாதம். எட்டாம் மாதமான ஷஃபான் நோன்பிருக்கும் மாதம். ஒன்பதாம் மாதம் புனித நூல் தந்த இறையோனின் இனிய மாதம். பத்தாம் மாதமான ஷவ்வால் மங்களம் பொங்கும் மாதம்.
முதன்மையாக ஒலிக்கும் பாடகரின் குரலும் உடன் ஒலிக்கும் பாடகர்களின் சேர்ந்திசையும் மனங்களை ஒன்றவைக்கும் மறை இசையாக ஒலிக்கின்றன.
பாடலின் காணொலியைக் காண: https://shorturl.at/dJU49