

நம்முடனே ஒட்டி உறவாடும் மூச்சின் தன்மைகள் என்னென்ன அதன் நுட்பங்கள் என்னென்ன என்பதை பீரப்பா முப்பது பாடல்களில் வடித்துள்ளார். அந்தப் பாடல்களுக்கான உரை நூல் இது.
அசையும் தன்மையுள்ளவை மற்றும் அசையா தன்மையுள்ளவற்றால்தான் அண்டசராசரமே உருவாகியிருக்கிறது. இதில் அசைவைக் குறிப்பது சரம். அசையாததைக் குறிப்பது அசரம். உயிரினங்களின் அடிப்படையான அம்சமான சரம் என்பதை அறிவதன் மூலம் எதையெல்லாம் நாம் அறிந்து கொள்ளலாம் என்பதற்கான விளக்கம் இந்நூலில் உள்ளது.
பஞ்ச பூதத்துக்கும் நாம் சுவாசிப்ப தற்கும் இடையேயான தொடர்பு, இதன் மூலம் இயற்கையின் கூறுகளை நம் உடல் எப்படி உள்வாங்குகிறது, முறையாக சுவாசிப்பதன் பலன், நட்டம் ஏற்படாமல் சுவாசிப்பது எப்படி.. என சுவாசம் தொடர்பான பல கேள்வி களுக்கான பதில்களை இந்நூல் தருகிறது.
சுவாசத்தின் சூட்சும இரகசியங்கள் 30
திருமெஞ்ஞான சரநூலின் உரைநூல்
மு.முகம்மது சலாகுதீன்,
பஷாரத் பப்ளிஷர்ஸ்,
தொடர்புக்கு: 9884951299, 9444298964.