

# ஒருவர் நபிகள் நாயகத்திடம் இஸ்லாத்தில் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபிகள், "நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவர்க்கும் அறியாதவருக்கும் சலாம் கூறுவதாகும்" என்றார்.
# என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும்விட நான் மிகுந்த அன்பானவராகும் வரை அவர் `ஈமான்' என்னும் இறை நம்பிக்கை உள்ளவராக மாட்டார்.
# மறுமையில் ஒரு மனிதனின் செயல்களைப் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராக இல்லை என்றால், ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்.
# அல்லாவிடம் மிக விருப்பமான தருணம் எதுவென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்டது. "தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது" என நபிகள் நாயகம் கூறினார்.
# ஒரு மனிதர் நபிகள் நாயகத்திடம், "நாங்கள் சாப்பிடுகிறோம் என்றாலும் எங்கள் பசி அடங்காமல் இருக்கிறது" என்றார். அதற்கு நபிகள் நாயகம், "நீங்கள் சேர்ந்து சாப்பிடுவீர்களா? தனியாகவா?" என்று கேட்டார்.
அவர் "தனியாகத்தான் சாப்பிடுகிறோம்" என்றார்.
நபிகள் நாயகம், "சேர்ந்து ஒன்றாகசாப்பிடுங்கள். அல்லாவின் பெயர் சொல்லிச் சாப்பிடுங்கள். உங்கள் உணவில் அருள்வளம் செய்யப்படும்" என்றார்.
தொகுப்பு: தங்க. சங்கரபாண்டியன்