

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து அவர் பிறந்த சமயம் சார்ந்த சடங்குகளும் காலம்காலமாக கடைப்பிடிக்கப்படுகின்றன. திருமணம் நடக்கும்போது செய்யப்படும் சடங்குகள், திருமணம் நடந்ததற்குப் பின் மணப்பெண் மணமகன் வீட்டிற்குச் சென்று அவரின் வீட்டில் உறவினர்களுக்கு உணவு பரிமாறுவது ஒரு சடங்காகவே கடைப்பிடிக்கப்படுகிறது. நம் வீடுகளில் கொண்டாடப்படும் சில சடங்குகளை நூல்பிடித்துக் கொண்டு சென்றால், அதன் தொன்மை சிலப்பதிகாரம், தொல் காப்பியம் நூல்களிலும் காணப்படுவதை ஆதாரமான தகவல்களாக நூலாசிரியர் இந்நூலில் அளித்துள்ளார். திருவிளக்கு வழிபாடு, குழந்தை பிறக்கும்போது செய்யப்படும் சடங்கு, தொட்டில் கட்டும் போது, பூப்புனித நீராட்டின்போது செய்யப்படும் சடங்கு, சோறு ஊட்டுதல், கல்வி கற்கத் தொடங்கும்போது இப்படி பல தருணங்களில் பல கலாச்சாரங்களில் செய்யப்படும் சடங்குகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.
தமிழரின் சமயச் சடங்குகள்
முனைவர் ப.பாலசுப்பிரமணியன்
அழகு பதிப்பகம்,
தொடர்பு: 9444191256.